முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Nellai-Mubarak-2025-08-25

சென்னை, ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி வழங்கியதை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒன்றிய அரசின் எண்ணெய் எடுப்பு கொள்கையின் கீழ், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1403.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ரூ.675 கோடி செலவில் இந்தக் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தக் கிணறுகள் மண்ணின் வளத்தை மீட்க முடியாத அளவில் பாழ்படுத்துவதுடன், நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரின் தரத்தை மோசமாக்கி, பயிர் உற்பத்தியையும், கடலோரப் பகுதிகளில் வாழும் உயிரினங்களையும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும்.

2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்த அறிவிக்கையின்படி, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல் இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. தமிழக முதல்வர், காவிரி டெல்டா உட்பட தமிழ்நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என உறுதியளித்திருந்தார். ஆனால், இந்த புதிய அனுமதி அவரது உறுதிக்கு மாறாக உள்ளது, இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த முடிவை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக திரும்பபெறவும் வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளின் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு முன்பு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்கும் கூட்டங்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்தத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராடும். தமிழக அரசு மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து