முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      தமிழகம்
Nellai-Mubarak-2025-08-25

Source: provided

சென்னை: கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து நெல்லை முபாரக்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 24 முக்கிய கனிமங்கள் மற்றும் 6 அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும், சுற்றுச்சூழலை அழிக்கும், கதிர்வீச்சு அபாயத்தை அதிகரிக்கும் ஆபத்தான முடிவாகும். இந்த அநீதியான கொள்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

2023-இல் மத்திய சுரங்க அமைச்சகம், லித்தியம், கிராபைட், தாமிரம், கோபால்ட், நிக்கல், காலியம், மாலிப்டினம், பிளாட்டினம், பாஸ்பரஸ், பொட்டாஷ், சிலிக்கான், டின், டைட்டானியம், டங்க்ஸ்டன், வானாடியம் உள்ளிட்ட 24 கனிமங்களை முக்கிய கனிமங்களாக வகைப்படுத்தியது. மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-இன் அடிப்படையில் தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 அணுக் கனிமங்களும் அங்கீகரிக்கப்பட்டன. 2023-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம், தனியார் நிறுவனங்களுக்கு இந்த கனிமங்களை அகழ அனுமதி வழங்கியது.

இந்நிலையில், ஆகஸ்ட் 4 மற்றும் 29 தேதிகளில் பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் துறைகளின் கடிதங்களைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பை நீக்கியுள்ளது. சட்டத் திருத்தம் இன்றி, வெறும் அலுவலக உத்தரவு மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது.

இந்த முடிவு மக்களை கதிர்வீச்சு அபாயத்தில் தள்ளுவதோடு, சுற்றுச்சூழலை பாதிக்கவும், கடல் அரிப்பை அதிகரித்து வாழ்விடங்களை அழிக்கவும் வழிவகுக்கும். ஏற்கனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் கனிம நிறுவனங்கள் கார்னெட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் போன்ற கனிமங்களை அகழ்ந்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் கீழ்மிடாலம், மிடாலம் பகுதிகளில் ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு கனிம அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்ப்பால், கடந்த ஆண்டு அக்டோபரில் திட்டமிடப்பட்ட கருத்துக் கேட்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய பொதுக் கருத்துக் கேட்பு ரத்து அறிவிப்பு, மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டம் தடையின்றி செயல்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்த முடிவு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகக் கொள்ளைக்கு வழிவகுத்து, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும். மேலும், இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையுமாகும். கனிம வளங்களை மத்திய அரசே ஏலம் விட்டு, அதற்கான அனுமதி வழங்கி, பொதுக் கருத்து கேட்காமல் செயல்படுத்த அனுமதிப்பது என்பது மக்கள் விரோத நடவடிக்கை மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானவை.

ஆகவே, மத்திய அரசு இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து