முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்வு ரூ.81,200 தொட்டு விலை புதிய உச்சம்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை: தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே ஒரே ஆண்டில் சவரனுக்கு ரூ.25 ஆயிரம் வரை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் (செப்டம்பர் 11ம் தேதி ) புதிய உச்சத்துடன் ரூ.81,200 ஆக விற்பனையானது.

'தங்கம்..' எத்தனையோ உலோகங்களில் இதுவும் ஒன்று என்றாலும், இதற்கு இருக்கும் மதிப்பே தனிதான். பெண்களின் மனம் கவர்ந்ததாலோ என்னவோ, அதன் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1920-ம் ஆண்டு ரூ.21-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், நேற்று (செப்டம்பர் 11ம் தேதி ) புதிய உச்சத்துடன் ரூ.81,200 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.10,150 விற்பனையானது.

இதன்படி நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்று முன்தினம் விலையிலேயே விற்பனையானது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதன்படி தங்கம் விலை ஒரே ஆண்டில் சவரனுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது. தங்கம் விலை 2025ம் ஆண்டில் மட்டும் இது 36 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச நிபுணர்களின் கூற்றுப்படி, இதே வேகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ரூ.1,25,000ஐ எட்ட வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து