முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      அரசியல்
Ramadoss 2023-07-28

சென்னை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை பா.ம.க. இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ் பா.ம.க. தலைவராக நானே இருப்பேன், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என்று அறிவித்தார். பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் என்றும் அறிவித்தார். இதையடுத்து, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கியும் புதிய நிர்வாகிகளை நியமித்தும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதனிடையே, கடந்த மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முவைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 10ம் தேதிக்குள்  பதில் அளிக்காவிட்டால் அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அதேவேளை, தந்தையுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் கடந்த ஜூலை 25ம் தேதி முதல் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். கிராமங்களை நோக்கி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் தேதி குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பா.ம.க. பெயர், சின்னம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை உரிமையியல் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கட்சிக்கோ, மாம்பலம் சின்னத்திற்கோ உரிமை கோரினால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்கக்கோரி ராமதாஸ் நியமித்த பா.ம.க. பொதுசெயலாளர் முரளி சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து