முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட்  போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் காலை கோவை ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டக் காரர்கள் அத்துமீறி ரெயில் நிலையத்துக்குள் செல்வதை தடுக்க இரும்புத்தடுப்புகள் வைத்து அடைப்பு ஏற்படுத்தி இருந்தனர். கோவை ரெயில் நிலையம் முன்பு சிவசேனா கட்சியினர் மாநில செயலாளர் முருகன் தலைமையில் கொடியை பிடித்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் முன்பு வந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். பிறகு அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதை தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்ற சிவசேனா கட்சியை சேர்ந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர். எனவே பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து