முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      இந்தியா
Kiran-Rijiju 2024-11-18

Source: provided

டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.

நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்பு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்பு சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்த்தில் தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வக்பு சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனினும் வக்பு சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்ம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது,

வக்பு திருத்தச் சட்டம் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகு நேற்று சுப்ரீம் கோர்ட்ம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். சுப்ரீம் கோர்ட்த்தின் தீர்ப்பு நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. நமது ஜனநாயகத்திற்கு நல்ல முடிவு. அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீதியை நோக்கி நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார். மத்திய அரசு வழக்குரைஞர் சட்டத்தின் விதிகள் மற்றும் நோக்கங்களை சுப்ரீம் கோர்ட்த்தில் விரிவாக முன்வைத்தார். அதன்படி ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவை சுப்ரீம் கோர்ட்ம் எடுத்துள்ளது.

எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்போது அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் சுப்ரீம் கோர்ட்ம் நேற்று அங்கீகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்த்தின் தீர்ப்பில் நான் திருப்தி அடைகிறேன். திருத்தப்பட்ட சட்டம் ஏழை முஸ்லிம்களுக்கு, குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இது வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும்.

சுப்ரீம் கோர்ட்த்தின் தீர்ப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விதிகளையும் அரசு ஆராயும், முஸ்லிம்களைப் பின்பற்றுவதில் உள்ள பிரச்னையை நாங்கள் ஆராய்வோம், விதிகளைப் பரிசீலிப்போம் என்று அவர் கூறினார். ஏப்ரல் 2, 3-ஆம் தேதிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு (திருத்த) சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றது, அதன்பிறகு அது சட்டமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து