முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      விளையாட்டு
Suryakumar 2023 08 09

Source: provided

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றியைப் பரிசாகக் கருதுகிறேன். நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம். வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம்,  அதைப் பெற முடிந்தது. நான் எப்போதும் செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம்   என்னவென்றால் இறுதிவரை களத்தில் நின்று பேட் செய்வது. இது ஒரு சரியான தருணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்” என்றார்.

_________________________________________________________________________________________________

இந்திய வீராங்கனைக்கு தங்கம் 

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இதில் நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான கஜகஸ்தானின் நாசிம் கிஜாய்பேவுடன் மோதினார். 

இதில் 4-1 என்ற கணக்கில் மீனாட்சி வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்று அசத்தினார். இந்த தொடரில் இந்திய தரப்பில் வீரர்கள் யாரும் பதக்கம் வெல்லாத நிலையில் வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை அறுவடை செய்து தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

_________________________________________________________________________________________________

பாக். தோல்வி குறித்து அக்ரம்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 63 பந்துகளில் ரன்கள் எடுக்காததே தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, குல்தீப் பந்து வீசும் விதத்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. அது பற்றி நான் போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சியில் கிரேட் பேட்ஸ்மேன் கவாஸ்கரிடம் பேசினேன். அப்போது குல்தீப்பின் முன்னங்கையை படிக்காத வரை உங்களால் அவர் எம்மாதிரியான பந்துகளை வீசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாது என கவாஸ்கர் தெரிவித்தார். அவர் சொன்னதே நடந்தது.

குல்தீப்புக்கு எதிராக ஒவ்வொரு 2வது பந்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் அடித்தார்கள். அப்படியானால் நீங்கள் அவருக்கு எதிராக எதையுமே படிக்கவில்லை என்று அர்த்தம். பாகிஸ்தான் தங்களுடைய ஆட்டத்தில் 63 டாட் பந்துகளை விளையாடியது. அப்படியானால் 10 ஓவருக்கு மேல் அவர்கள் டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர். அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பாராட்டுக்கள். ஹசன் நவாஸ், உங்களுடைய கேப்டன் ஹாரிஸ் ஆகிய அனைவருமே திறமையான வீரர்கள். ஆனால் நீங்கள் சூழ்நிலையைப் படித்து உங்களுடைய பவுலரை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். ஆனால் அவர்கள் அனைவருமே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக மட்டுமே விளையாட முயற்சித்தனர். இவ்வாறு அவர் கூறினார். 

_________________________________________________________________________________________________

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எதிர்ப்பு

இந்திய அணியின் செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய போட்டியில் (அதாவது நேற்று முன்தினம் ) விளையாட்டு அறம் இல்லாமல் போனது மிகவும் ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கண்ணியத்துடன் கொண்டாடப்படும் என்று நம்புவோம்” என பதிவிட்டுள்ளார். 

_________________________________________________________________________________________________

இந்தியாவுக்கு எதிராக பாக்., புகார் 

கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது. இந்திய அணியின் இந்த செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்தியாவின் அந்த செயலுக்கு எதிராக ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. இது பற்றி போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராப்ட் அவர்களிடம் பாகிஸ்தான் கொடுத்துள்ள புகாரில், அவர்களுடைய செயல் விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது. அவர்களுடைய செயலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்திலேயே எங்கள் கேப்டன் சல்மான் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து