முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயம் அடைந்த மேலும் 4 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர் ஆகினர்.

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி த.வெ.க பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுவரை 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், மத்திய மின்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 5 பேர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். 2-வது நாளான நேற்று முன்தினம் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடந்தது. ஏமூர்புதூர், ராமா கவுண்டனூர், சுக்காலியூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர்.

இந்நிலையில், நேற்று 3-வது நாளாக கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மேலும் 4 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து