எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் ராஞ்சி வந்துள்ளதால், அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தோனி விருந்து வைத்துள்ளார்.விருந்து முடிந்த பின் தோனி மற்றும் விராட் கோலி ஒரே காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கான, இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெயிக்வாட் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ருதுராஜ் கெயிக்வாட் நீண்ட நேர பயிற்சியில் ஈடுபட்டார். மேலும் அவருடன் பயிற்சியளர் கம்பீர் நீண்ட நேரம் ஆலசோனை செய்தார். இதனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
_____________________________________________________________________________________
போட்டோஷூட் வீடியோ வெளியீடு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலியும் இடம் பெற்றனர்.
_____________________________________________________________________________________
ஐதராபாத் வருகிறார் மெஸ்சி
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
_____________________________________________________________________________________
சிலியை வீழ்த்தியது இந்தியா
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை 13 நாள் ஹாக்கி போட்டிகள் பெறுகிறது. இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்துகொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன. இந்நிலையில், சென்னையில் ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர். இறுதியில், இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.
_____________________________________________________________________________________
மோர்னே மோர்க்கல் பதில்
2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலகத் தரத்திலான வீரர்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் அனுபவத்தையும் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதை எப்போதும் நம்புகிறேன்.
அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப் பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ரோஹித், கோலி இருவரும் முழு உடல் தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இருவரும் விளையாட வாய்ப்பிருக்கிறது என்றார்.
_____________________________________________________________________________________
போட்டியை காண தோனி வருகை?
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியைக் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இப்போட்டியைக் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சி திடலுக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல் பேசியதாவது: நாம் அனைவரும் மகேந்திர சிங் தோனியைப் பார்த்து வளர்ந்துள்ளோம். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியைக் காண அவர் திடலுக்கு வந்தால், ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும் மிகுந்த உற்சாகமடைவார்கள் என்றார். சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? த.வெ.க. ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுவை பெண் எஸ்.பி.
09 Dec 2025சென்னை, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை புதுச்சேரி பெண் எஸ்.பி. கடுமையாக எச்சரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தி.மலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
09 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
புதுச்சேரியில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கியுள்ளது: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
09 Dec 2025சென்னை, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் பதிவு செய்துள்ளார்.
-
பீகார் மாநில தேர்தல் வெற்றி: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு
09 Dec 2025டெல்லி, டெல்லியில் நடந்த தே.ஜ. கூட்டணி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
-
தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்: பிரம்மாண்ட கூட்டத்தில் விஜய் பேச்சு
09 Dec 2025புதுச்சேரி, புதுவையை பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் கற்றுக்கொள்ளாது என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். மேலும் நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
-
தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம்
09 Dec 2025சென்னை, தி.மு.க. அரசை கண்டித்து சென்னை தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
-
புதுவை: விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்...!
09 Dec 2025புதுவை, புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிவகங்கையை சேர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நீலகிரியில் குந்தா, பந்தலூர் 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
09 Dec 2025சென்னை, உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
-
சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
09 Dec 2025சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச்சு: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யில் ஆளும் கட்சியினர் அமளி
09 Dec 2025டெல்லி, மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில் அமளி ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது தமிழக அரசு சார்பில் வாதம்
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பான விசாரணையின் போது கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
-
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
09 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார்.
-
வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து
09 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
-
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ விமான சேவைகளை குறைக்க விமான போக்குவரத்து துறை அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
-
ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
09 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
09 Dec 2025டெல்லி, வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மத்திய அரசு இணையதளத்தில் வக்பு சொத்துகள் பதிவேற்றம்
09 Dec 2025புதுடெல்லி, மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2025சென்னை, சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
09 Dec 2025சென்னை, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
09 Dec 2025திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.
-
இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக பேச்சுவாா்த்தை
09 Dec 2025டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.


