எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சி.எஸ்.ஐ. மெட்ராஸ் டையோசீஸ் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை, இன்றைக்கு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பாரா தடகள வீரர்களுக்கு பரிசுகளை வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு நாட்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை உறுதியோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய சி.எஸ்.ஐ மெட்ராஸ் டையோசீஸ்க்கு என்னுடைய வணக்கத்தையும், பாராட்டுகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே உறுதியோடும், உணர்ச்சியோடும் இந்த நிகழ்ச்சியில், பரிசளிப்பு விழாவில் உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
குறிப்பாக, இந்த நிகழ்ச்சியை, சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் என்கின்ற அருமையான ஒரு தலைப்பில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, இங்கு இருக்கக்கூடிய மாற்றுத்திறன் குழந்தைகளும், சிறப்பு குழந்தைகளும் தடைகளை உடைத்து இன்றைக்கு உண்மையான சாம்பியன்களாக உருவாகி இருக்கிறார்கள். இன்றைக்கு இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பாரா-தடகள வீரர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.
மற்ற மாநிலங்களில் மாற்றுத்திறன் வீரர்கள், பதக்கங்களை வென்ற பிறகுதான் அவர்களுடைய மாநிலத்தில் பரிசுத்தொகையைக் கொடுப்பார்கள். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில், நம்முடைய முதல்வர் அவர்கள் மட்டும்தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலமாக அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உதவித்தொகையை வழங்கி வருகிறார். வெற்றி பெற்ற பிறகு, அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பிக்கின்றார் நம்முடைய முதல்வர் அவர்கள்.
மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு மாநிலம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாகச் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த நான்கு வருடங்களில் மட்டும், 250 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு 30 கோடி ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகையை நம்முடைய முதல்வர் அவர்கள் வழங்கி இருக்கின்றார். சுமார் 500 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கும், பல்வேறு சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக சுமார் 8 கோடி ரூபாய் நம்முடைய முதல்வர் வழங்கி இருக்கிறார்.
தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த 5 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசுத் துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பையும் நம்முடைய முதல்வர் அவர்கள் வழங்கி இருக்கிறார். இந்த ஆண்டு, 25 மாற்றுத்திறன் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று முதல்வர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், கடந்த 3 வருடங்களில் மட்டும் 8 ஆயிரத்து 800 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் நம்முடைய அரசு வழங்கி இருக்கிறது. மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காக, தலா 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 மாவட்டங்களில் சிறப்பு பாரா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் புதிதாக மேலும், 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கின்ற பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னையில், நவீன வசதிகளுடன் கூடிய பாரா பேட்மிண்டன் அகாடமி முதன்முறையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதிகளை எல்லாம் இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் நீங்கள் பயன்படுத்தி, பல மாற்றுத்திறன் வீரர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் ஒரே இலட்சியம். அப்படிச் சாதித்த ஒரு மாற்றுத்திறன் வீரரைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் தம்பி மனோஜ். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக அவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு விளையாட்டில் மிகப்பெரிய ஆர்வமும், திறமையும் இருந்தது. தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்திருந்தார் மனோஜ். அவருக்குப் பெரிய பெரிய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான போதுமான நிதி வசதி அவரிடத்தில் இல்லை.
நம்முடைய முதல்வரை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார் மனோஜ். நம்முடைய முதல்வர் மனோஜ் அவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக நிதி உதவியை உடனே வழங்க உத்தரவிட்டார்கள். நாங்களும் நிதி உதவி கொடுத்தோம். அதைப்பெற்றுச் சென்ற தம்பி மனோஜ், இன்றைக்குப் பல தேசிய மற்றும் சர்வதேச பாரா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களைக் குவித்து, வெற்றிகளைத் தேடித்தந்து கொண்டிருக்கிறார். அவரின் திறமையைப் பாராட்டி, இன்றைக்கு தமிழ்நாடு அரசு சார்பில், அவருக்கு இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகையை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு அரசு வேலையையும் முதல்வர் வழங்கி இருக்கிறார்.
தம்பி மனோஜுக்கு சென்ற வருடம் மதுரையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலும் நான் சென்று கலந்துகொண்டேன். சென்ற வாரம் நவம்பர் 27-ஆம் தேதி அன்று, உங்களுக்குத் தெரியும், அது என்னுடைய பிறந்தநாள். அன்றைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தம்பி மனோஜ் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினார். அன்றைக்குதான், அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக, அந்த நல்ல செய்தியை என்னிடத்தில் கூறினார்.
இப்படி, முதல்வர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளில் மனோஜ் என்ற ஒரு மாற்றுத்திறனாளி வீரரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை இந்த அளவிற்கு நம்முடைய அரசு மாற்றிக் காட்டியிருக்கிறது. எனவே, இங்கே கூடி இருக்கக்கூடிய உங்களில் இருந்து ஏராளமான மனோஜ்கள் உருவாக வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் ஒரே லட்சியம். ஆகவே, மாற்றுத்திறன் வீரர்கள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு எல்லா வகையிலும், நம்முடைய அரசும், முதல்-அமைச்சரும், நம்முடைய துறையும், நானும் துணை நிற்போம் என்று சொல்லிக் கொண்டு, பரிசுகளைப் பெற்றுள்ள அத்தனை வீரர், வீராங்கனைகளுக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? த.வெ.க. ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுவை பெண் எஸ்.பி.
09 Dec 2025சென்னை, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை புதுச்சேரி பெண் எஸ்.பி. கடுமையாக எச்சரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தி.மலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
09 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
புதுச்சேரியில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கியுள்ளது: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
09 Dec 2025சென்னை, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் பதிவு செய்துள்ளார்.
-
பீகார் மாநில தேர்தல் வெற்றி: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு
09 Dec 2025டெல்லி, டெல்லியில் நடந்த தே.ஜ. கூட்டணி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
-
தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்: பிரம்மாண்ட கூட்டத்தில் விஜய் பேச்சு
09 Dec 2025புதுச்சேரி, புதுவையை பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் கற்றுக்கொள்ளாது என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். மேலும் நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
-
தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம்
09 Dec 2025சென்னை, தி.மு.க. அரசை கண்டித்து சென்னை தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
-
நீலகிரியில் குந்தா, பந்தலூர் 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
09 Dec 2025சென்னை, உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
-
சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
09 Dec 2025சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச்சு: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யில் ஆளும் கட்சியினர் அமளி
09 Dec 2025டெல்லி, மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில் அமளி ஏற்பட்டது.
-
புதுவை: விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்...!
09 Dec 2025புதுவை, புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிவகங்கையை சேர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது தமிழக அரசு சார்பில் வாதம்
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பான விசாரணையின் போது கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
-
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
09 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார்.
-
வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து
09 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
-
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ விமான சேவைகளை குறைக்க விமான போக்குவரத்து துறை அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
-
ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
09 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
09 Dec 2025டெல்லி, வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மத்திய அரசு இணையதளத்தில் வக்பு சொத்துகள் பதிவேற்றம்
09 Dec 2025புதுடெல்லி, மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2025சென்னை, சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
09 Dec 2025சென்னை, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
09 Dec 2025திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.
-
இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக பேச்சுவாா்த்தை
09 Dec 2025டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.


