முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி முதல்வருடன் த.வெ.க. பொதுச்செயலாளர் மீண்டும் சந்திப்பு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Bussy-Anand 2023-11-03

Source: provided

புதுவை : புதுச்சேரி முதல்வருடன்  தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்தித்து பேசினார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு, தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் காஞ்சிபுரத்தில் கல்லூரி ஒன்றில் உள்ளரங்கு கூட்டம் நடத்தி மக்கள் சந்திப்பை நடத்தினார். சேலத்தில் விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்டு த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அனுமதி வழங்க புதுச்சேரி காவல்துறை மறுத்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதால் சாலை வலம் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று மீண்டும் புதுச்சேரி முதல்வரைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து