முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் எழுப்பிய எந்த ஒரு பிரச்சினைக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      இந்தியா
Rahul 2025-07-29

புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தின்போது தான் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் அமித்ஷா நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

தேர்தல் சீர்திருத்தம் குறித்து நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாக்கு திருட்டு குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார். அப்போது இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “காரசாரமாக நடந்த அந்த விவாதத்தில் அமித்ஷா தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. இதையெல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள். அவர் மனதளவில் அழுத்தத்தில் இருந்தார். அது பாராளுமன்றத்தில் வெளிப்பட்டது. அதை முழு நாடும் பார்த்தது.

நான் கூறிய விஷயங்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை, எந்த ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. அதுபற்றி நாங்கள் செய்தியாளர் சந்திப்பின்போது பகிரங்கமாகக் கூறினோம். எனது செய்தியாளர் சந்திப்புகளை பாராளுமன்றத்தில் விவாதிப்போம் என்று அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். பதில் கிடைக்கவில்லை. உண்மை என்ன என்பது உங்களுக்குத் (பத்திரிகையாளர்களுக்கு) தெரியும்.

அவரது உரை முழுக்க முழுக்க தற்காப்புக்கான ஒரு முயற்சியே அன்றி வேறில்லை. வாக்கு திருட்டு என்பது மிகப் பெரிய தேச துரோகம். வெளிப்படையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தலைமை தேர்தல் ஆணையருக்கு கூடுதல் சட்ட பாதுகாப்பு வழங்குவது என நான் எழுப்பிய எந்த ஒரு பிரச்சினைக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து