முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
Jacto-Jio

சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 8-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று (ஜன. 2) பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், "பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் இன்று அறிவிப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். சுமார் 22 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் எங்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம். முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து நாங்கள் ஏற்கெனவே அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம். மற்ற கோரிக்கைகள் குறித்தும் அமைச்சர்களிடம் பேசியிருக்கிறோம். அதுகுறித்த அறிவிப்பும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

முன்னதாக பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து