முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ. மற்றும் எக்ஸ் தள நிறவனம்  72 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஏ.ஐ. பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் குரோக் ஏ.ஐ., பெண்களை மையப்படுத்தி ஆபாசமாகவும் நாகரிகமற்ற முறையிலும் படங்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து மத்திய அரசுக்கும் புகார்கள் சென்றன.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அதிரடியாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் 2021-ம் ஆண்டின் ஐடி விதிகள் ஆகியவற்றின் கீழ், எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் செயற்கையாக படங்கள் மற்றும் வீடியோக்கள் குரோக் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும்; மோசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை நீக்க வேண்டும்; 72 மணி நேரத்திற்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை மீறும் பட்சத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து