முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இஷா சிங் டெல்லிக்கு திடீரென இடமாற்றம்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      தமிழகம்
Isha-Singh-2026-01-05

புதுச்சேரி, புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.எஸ்.பி. இஷா சிங், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.

2021 ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், 2024இல் இருந்து புதுச்சேரியில் பணியாற்றி வந்தார். கரூர் த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறையாக கடந்த டிசம்பவர் மாதம் புதுச்சேரியில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.

புதுச்சேரி உப்பளம் துறைமுக அரங்கில் நடைபெற்ற த.வெ.க. பொதுக் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஸ் கொடுக்கப்பட்ட 5,000 நபர்களை மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர். இந்த கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த புதுவை எஸ்.எஸ்.பி. இஷா சிங், அரங்கின் நுழைவு வாயிலிலேயே நின்று மொத்த கூட்டத்தையும் சிறப்பாக கையாண்டார்.

பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க முயன்ற த.வெ.க. பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை கடிந்துகொண்ட காட்சி மூலம் இணையத்திலும் வைரலாகப் பரவினார். இருப்பினும், பெரும் விபத்துக்குப் பிறகு நடைபெற்ற புதுவை கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்டதற்காக அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் இஷா சிங் பெற்றார். மேலும் இஷா சிங்கை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் அழைத்து பாராட்டும் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து