முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு: டெல்லியில் வருகிற 15-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      இந்தியா
Modi

புதுடெல்லி, காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டை டெல்லியில் வருகிற 15-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

கடந்த 1969-ம் ஆண்டு, காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் மாநாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களை ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.

இந்நிலையில், நடப்பாண்டில், காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்துகிறார். பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது. 15-ந் தேதி, இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

பாராளுமன்றங்களின் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று ஓம் பிர்லா கடந்த ஆண்டு தெரிவித்தார். அதன்படி, மாநாட்டில், 'பாராளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு', சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளில் அவற்றின் தாக்கம்', 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் நடக்கின்றன. 'வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு' என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து