முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம், விலை மீண்டும் உயர்வு

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      தமிழகம்
gold 2024-01-04

சென்னை,  சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் (பிப்ரவரி 05) தங்கம் விலை கிராமுக்கு, 580 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 4,640 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்தது.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 259 ஆக விற்பனை ஆனது.

சவரனுக்கு 1,140 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை வார இறுதி நாளில் உயர்வை சந்தித்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து