முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      உலகம்
Trump 2025-08-01

நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார். அதன்பின்னர், இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த திங்கள்கிழமை (பிப். 2) தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார். இந்தியா மீண்டும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கினால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டது. இதனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தவின் மூலம் இந்தியா மீது இருந்த வரி தற்போது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீதம் வரி ரத்து செய்யப்படுவதாகவும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஜவுளி, தோல் பொருள்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18 சதவீதம்ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்துப் பொருள்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து