முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      உலகம்
Pak 2023-09-16

லாகூர், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா, ரூ.55 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு ஒரே நாளில் விலை உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை ஆகும். இது நேற்று (மார்ச் 7 ஆம் தேதி ) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக், துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். மேலும், நாட்டில் போதுமான அளவுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல்களைப் பெற்று செல்கின்றனர். குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரே வாரத்தில் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடர்ச்சியால், பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் பல்வேறு அத்தியாவசியத் தேவைப்பொருள்கள் விலை உயர்ந்து காணப்படுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து