முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: இந்தியாவில் பாசுமதி அரிசி விலை மேலும் குறைகிறது

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      இந்தியா
Rice-1

டெல்லி, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை மேலும் குறையவுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உற்பத்தியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிசக்தி துறையில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை, இந்தியாவில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான முக்கிய கடல்சார் வழித்தடம். தற்போது இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாகச் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைப்பதால் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பாசுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தற்போது இந்த வழியாகச் செல்ல முடியாததால் பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. போரால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கொள்கலனுக்கு 3,500 டாலரில் இருந்து 4,500 டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 4 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துபாய், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சில நாள்களுக்குப் போர் தொடர்ந்தால் பாதிப்பு இன்னும் மோசமாகும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசி விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. டன் கணக்கில் பாசுமதி அரிசி இங்கு தேங்கியுள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து