முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

120 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் பல்பு

Image Unavailable

எந்த பல்பாக இருந்தாலும் நம்மூர் மின்சாரத்துக்கு சில மாதங்கள் தாங்குவதே பெரிய விஷயம். அதிலும் அந்த காலத்து குண்டு பல்பு என்றால் கேட்கவே வேண்டாம்...மின் அழுத்தம் சற்றே மாறினாலும் டப் பென்று மூச்சை நிறுத்தி விடும். வீடு இருண்டு விடும். இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் 120 ஆண்டுகளாக விடாமல் எரிந்து கொண்டிருக்கு குண்டு பல்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா..

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் ஈஸ்ட் அவென்யூவில் உள்ளது லிவர்மோர் ப்ளேசன்டன் தீயணைப்புத்துறை. இந்த தீயணைப்பு நிலையத்தில் தான் 1901 ஆம் ஆண்டிலிருந்து எரிகிறது இந்த அணையா குண்டு பல்பு. கார்பன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் பல்பு 1890 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனத்தால் ஓஹியோவிலுள்ள ஷெல்பியில் தயாரிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க கூடிய இந்த பல்ப் சென்டேனியல் பல்ப் என அழைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பல்ப் பொருத்தப்பட்ட பொழுது 30 வாட் வெளிச்சத்தை வெளியிட்டு கொண்டிருந்தது. தற்பொழுது மிகவும் மங்கலாக 4 வாட் இரவு விளக்கு போன்ற வெளிச்சத்தை வெளியிடுகிறது. என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்