முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரயிலின் கடைசி பெட்டியில் X குறியீடு ஏன்?

Image Unavailable

நாம் அனைவரும் ரயிலில் பயணம் செய்திருந்தாலும் பெரும்பாலானோர் ரயிலின் கடைசி பெட்டியை கவனித்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக கடைசி பெட்டியில் மிகப் பெரிய அளவில் ஆங்கில எழுத்தான X வடிவில் என்ற குறியீடு வரையப்பட்டுள்ளதை பார்த்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில்வே பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அந்த குறீயிடானது. புறப்பட்டு செல்லும் ரயிலின் அனைத்து பெட்டிகளும் எந்த வித பழுதும் இன்றி, முறையாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கத் தான் அந்த குறியீடு வரையப்பட்டுள்ளது. அதை பார்த்த பிறகே கார்டு கொடியை அசைக்க ரயில் புறப்பட தயாராகும். அதே போல இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும்.

அதே போல் கடைசிப்பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்பட்டிருக்கும் LV என்ற ஆங்கில எழுத்தும் பாதுகாப்பு குறித்து துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதற்காக அவை எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும். அவற்றை சரி செய்த பிறகே ரயில் புறப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்