எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இஷாரா. அந்த படத்தில் நடித்ததுடன் பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் இப்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார். TN. 75 கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க கேவின் ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்த இஷாரா தலை மறைவாகி விட்டதாக படத்தின் தயாரிபளார் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் அவர்கள் கூறி உள்ளதாவது.. இஷாராவை 28.02.2016 அன்று 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நங்கள் கேட்டது 20 நாட்கள் தான்.
ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் தேதி கொடுத்தார். அவர் இல்லாத காட்சிகளையும் படமாக்கினோம். அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ்ஆப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார்.
சில சமயங்களில் யாரோ ஒரு ஆண் குரல்தான் வரும் இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். நங்கள் கதையில் ஏதாவது திருத்தும் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார்.. தேதி கொடுப்பார் ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம். அவள் வருவாளா என்று காத்திருந்தோம்.
எந்த தகவலும் இல்லை வேறு வழி இல்லாமல் கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரப்பட வில்லை. தயாரிப்பாளர் கில்டில் திரு.ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாரவிடம் பேச சொன்னோம் அவர்களுக்கும் சரியான தகவல் இல்லை. இஷாரவுக்கு போன் செய்தால் BLOCK லிஸ்டில் எங்கள் எல்லோரது டெலிபோன் எண்களையும் மாற்றி விட்டார்.
உங்களது அணுகுமுறை சரியில்லை நங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், கோர்டுக்கும் போவோம் என்று மெசேஜ் அனுப்பினோம் அதற்க்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “ என்று. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற இது மாதிரி நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது.
அவர்களது முதலீட்டில் விளையாடும் புதியவர்களின் கனவுகளில் வெண்ணீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



