எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இஷாரா. அந்த படத்தில் நடித்ததுடன் பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் இப்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார். TN. 75 கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க கேவின் ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்த இஷாரா தலை மறைவாகி விட்டதாக படத்தின் தயாரிபளார் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் அவர்கள் கூறி உள்ளதாவது.. இஷாராவை 28.02.2016 அன்று 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நங்கள் கேட்டது 20 நாட்கள் தான்.
ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் தேதி கொடுத்தார். அவர் இல்லாத காட்சிகளையும் படமாக்கினோம். அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ்ஆப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார்.
சில சமயங்களில் யாரோ ஒரு ஆண் குரல்தான் வரும் இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். நங்கள் கதையில் ஏதாவது திருத்தும் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார்.. தேதி கொடுப்பார் ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம். அவள் வருவாளா என்று காத்திருந்தோம்.
எந்த தகவலும் இல்லை வேறு வழி இல்லாமல் கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரப்பட வில்லை. தயாரிப்பாளர் கில்டில் திரு.ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாரவிடம் பேச சொன்னோம் அவர்களுக்கும் சரியான தகவல் இல்லை. இஷாரவுக்கு போன் செய்தால் BLOCK லிஸ்டில் எங்கள் எல்லோரது டெலிபோன் எண்களையும் மாற்றி விட்டார்.
உங்களது அணுகுமுறை சரியில்லை நங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், கோர்டுக்கும் போவோம் என்று மெசேஜ் அனுப்பினோம் அதற்க்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “ என்று. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற இது மாதிரி நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது.
அவர்களது முதலீட்டில் விளையாடும் புதியவர்களின் கனவுகளில் வெண்ணீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


