முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் தலைவர்கள் பிரச்சாரம் உச்சக்கட்டம்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.16 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. நேற்று இத்தொகுதியில் தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வரும் 18 ம் தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பசாமி எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) காலமானதையொட்டி அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. 29 ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பிறகு 1 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 3 ம் தேதியன்று வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இத்தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

அ.தி.மு.க வேட்பாளராக முத்துச்செல்வியும், தி.மு.க வேட்பாளராக ஜவஹர் சூரியகுமாரும், ம.தி.மு.க வேட்பாளராக சதன் திருமலைகுமாரும், தே.மு.தி.க. வேட்பாளராக முத்துக்குமாரும் ஆக 3 குமார்கள் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் அவர் 9 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு கருணாநிதியே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். விரைவில் மின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முதல்வர் தனது பிரச்சாரத்தின் போது மக்களுக்கு உறுதியளித்தார். சென்ற இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று இத்தொகுதியில் பிரச்சாரம் செய்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே இத்தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்த தொகுதியில்தான் உள்ளது. அதனால் 2 ம் இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வைகோ தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் தன் பங்கிற்கு பிரச்சாரம் செய்து வருகிறார். ஆக, இத்தொகுதியில் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

தலைவர்கள் இங்கு முகாமிட்டு அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுக் கேட்டு வருகிறார்கள். இந்த உச்சக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. கள்ள ஓட்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல் போன்றவற்றை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படியிருந்தும் தி.மு.க.வினர் சில்வர் பாத்திரங்களையும், தி.மு.க. கரை வேட்டிகளையும் வாக்காளர்களுக்கு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. திருமங்கலம் பார்முலாவை இங்கும் அமல்படுத்தலாம் என்று அவர்கள் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் இந்த கணக்கை அ.தி.மு.க.வும், தேர்தல் கமிஷனும் முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago