முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலைகள் உடைப்பு: திருமங்கலம் அருகே பஸ் உடைப்பு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

திருமங்கலம்,ஆக.8 - மதுரை விமான நிலையம் அருகே தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் பல இடங்களில் பதட்டம் ஏற்பட்டது. திருமங்கலம் அருகே வந்துகொண்டியிருந்த அரசு பஸ் மீது டூவீலரில் வந்தவர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சாலைகளில் ரோந்து வருகின்றனர். மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் இரு தலைவர்களின் சிலைகள் நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சின்ன உடைப்பு, அவனியாபுரம், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒருதரப்பினர் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை, தூத்துக்குடி செல்லும் மோட்டார் வாகனங்கள் திருமங்கலம் வழியாக திருப்பிவிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை வந்த அரசு பஸ் மீது வலையபட்டி விலக்கு அருகே டூவீலரில் வந்தவர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து டிரைவர் துரைப்பாண்டி, திருமங்கலம் டவுன் போலீஸ் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கைது செய்திட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதற்றம் மிகுந்த சாலைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் சற்று தணிந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்