முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

700 டன்தங்கத் தாதுவுடன் நடுக்கடலில் மாயமான ரஷ்ய சரக்குகப்பல்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஆக.​ -30 - ரஷ்யாவில் 700 டன் தங்கத் தாதுவை ஏற்றிச் சென்ற ரஷ்ய சரக்குக் கப்பல் நடுக்கடலில் மாயமாகி இருக்கிறது.ரஷியாவின் ஓகோட்ஸ் கடற்பரப்பில் 700 டன் தங்கத் தாதுவை ஏற்றிக் கொண்டு அமுர்ஸ்கயா என்ற சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் கிரன் துறைமுகத்திலிருந்து ஓகோட்ஸ் துறைமுகம் நோக்கிச் செல்லும் வழியில் திடீரென மாயமானது.மாயமான தங்கக் கப்பலில் மொத்தம் 8 அல்லது 11 பேர் இருந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானங்களும் தேடுதல் நடவடிக்கையில் ்டுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்