முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முதல்மந்திரிக்கு ஒஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

நகரி, நவ.25 - ஆந்திராவில் கிரண்குமார் ரெட்டி முதல் மந்திரியாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி அங்கு  காங்கிரஸ் கட்சியினர் கிரண்குமார் ரெட்டியை கிருஷ்ணராக சித்தரித்து 

சுவரொட்டி ஒட்டியுள்ளனர். கிருஷ்ணரின் படத்தில் கிரண்குமார் ரெட்டி படத்தை கிராபிக்ஸ் மூலம் இணைத்துள்ளனர்,

அந்த சுவரொட்டியில் கிருஷ்ணரைப் போல் கிரண்குமார்ரெட்டி ஆட்சி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மெகபூப் நகர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா கூறியதாவது:

கிரண்குமார் ரெட்டி முதல்வர் பகவிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவு  செய்வதையொட்டி விழா எடுக்கிறார். அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

மின்சார கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு  அகியவைதான் அவரது சாதனையாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இப்போது புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர எம்பிக்கள் பலத்தோடு ஆட்சி செய்யும் மத்திய அரசு ஆந்திர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றார். இதுபற்றி நடிகை ரோஜா கூறியது: கிரண்குமார் ரெட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா. எம்எல்ஏ கூட அவரை தேர்ந்தெடுக்கவில்லை. அவர்சோனியாவால் நியமனம் செய்யப்பட்ட ஷீல்டு முதல்வர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago