முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா உள்பட 4 பேரின் நீதிமன்ற காவல் 20-ம் தேதிவரை நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.16 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கில் ஆ.ராசா உட்பட 4 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 20 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை அடுத்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இவரது அப்போதைய உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா ஆகியோரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழலில் தொடர்புடை ஸ்வான் டெலிகாம் தலைவர் பல்வாவும் கைது செய்யப்பட்டார்.  ஆரம்பத்தில் சி.பி.ஐ. காவலில் இருந்த இவர்கள் பிறகு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்படி ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 4 பேரும் டெல்லியில் பாதுகாப்பு அதிகம் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களது நீதிமன்ற காவல் கடந்த 13 ம் தேதி  முடிவடைந்ததை அடுத்து இவர்கள் நால்வரும் கடந்த 13 ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்களது நீதிமன்றக் காவலை 15 ம் தேதிவரை (அதாவது நேற்றுவரை) நீட்டித்து நீதிபதி ஷைனி  உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு திஹார் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். 

நேற்று இந்த நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இவர்கள் 4 பேரும் நேற்று மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 4 பேரையும் வருகிற 20 ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் நான்குபேரும் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago