முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் ``அகிலன்''

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

மதுரை பகுதியில் இளம் பெண்கள் ரவுடிகளால் கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்களை பிடிக்க போலீஸ் திணறுகிறது. இதனால் போலீஸ் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது. இதை போக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வரும் போலீஸ் அதிகாரி ராஜ்கபூர் ஒரு கடத்தல் நாடகம் நடத்துகிறார். அதற்காக திருமணம் நடக்கவிருக்கும் வீட்டிலிருந்து ஒரு பெண்ணை கடத்த போலீஸ் டீம் திட்டமிடுகிறது. பெண்ணை கடத்தும் பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் (நாயகன்) ஒப்படைக்கப்படுகிறது. நாடகம் தொடங்குகிறது. கடத்தல்காரனாக நடிக்க வேண்டிய சரவணன் நிஜ கடத்தல்காரராக மாறி போலீஸ் அதிகாரி ராஜ்கபூர் மகளை கடத்துகிறார். இந்த உண்மை கபூருக்கு தெரியும் போது பதறுகிறார். அதே நேரத்தில் நடப்பது நாடகம் என்பது மக்களுக்கு தெரியக்கூடாது என்றும் கவனமாகவும் இருக்கிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரி மகள் உயிருடன் மீட்கப்பட்டாரா? 2 சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் நிலை என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ். நாயகன் சரவணன் அகிலன் என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டராக வந்து கலக்குகிறார். பொருத்தமான வேடம். நாயகி வித்யா சரவணனை விடாபிடியாக காதலிக்கிறார். இவரின் வலையில் சிக்காமல் நழுவி நழுவி சரவணன் ஒடுகிறார். இதனால் நாயகி வருந்தும் காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியை பிரகாசமாக வெளிப்படுத்திருக்கிறார். மீசை இல்லாமல் கடுகடுப்பான போலீஸ் அதிகாரியாக மிரட்டிருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, மயில்சாமி, போண்டா மணி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், மதுரை முத்து என ஒருபெரும் காமெடி கூட்டம் கலகலப்பு இல்லாமல் கலகலப்பை ஏற்படுத்துகிறார்கள். காட்சிகளுக்கு போதுமான அளவு ஒளிப்பதிவு செய்து படம் பிடித்திருக்கிறார் அருள்செல்வன் கணேஷ் ராகவேந்திரா இசையில் புதிய வாடை இல்லை. பின்னணி காட்சிகளுக்கு ஓ கே. மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங் விறுவிறுப்பை தருகிறது. எழுத்து இயக்கம்- எஸ்.ஐ.ஹென்றி ஜோசப், தயாரிப்பு- ஸ்பாட் லைட்சினி கிரியேஷன் சார்பில் டாக்டர் சரவணன். திரையில் நடப்பது நாடகம் தான் என்பதை நாடகமாகவே காட்சிப்படுத்தி வந்திருக்கும் படம் அகிலன் ஆக்ஷன்-காமெடி பிரியர்களுக்கு ஓ.கே.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்