முக்கிய செய்திகள்

நடிகர் விக்ரம் பிறந்த நாளில் உதவிகள் வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      சினிமா
raj6 1

 

சென்னை, ஏப்.18 - நடிகர் விக்ரம் பிறந்த நாளையொட்டி ஏழை-எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நடிகர் விக்ரம் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அகில இந்தய விக்ரம் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ஏழை மக்களுக்கு நலதிட்ட உதவிகளை இயக்குநர் தரணி, இயக்குநர் விஜய், விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மற்றும் விக்ரம் மேலாளர் கிரி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.

நலதிட்ட உதவிகளாக நடிகர் விக்ரம் ரசிகர்  இறந்த மோகன்ராஜ், சென்னை குடும்பத்திற்கு உதவித்தொகை ரூ.25,000/-, ஊட்டியில் கடும் மழையில் வீடு இழந்த ரசிகர் சசிகுமாருக்கு உதவித்தொகை ரூ.25,000/-, உடல் ஊனமுள்ள சென்னை ரசிகர் எம்.ராஜா மூன்று சக்கர வண்டி வாங்க உதவித்தொகை ரூ.15,000/-, சென்னை ரசிகர் பலராமன் காய்கறி விற்பனை வண்டி வாங்க உதவித்தொகை ரூ.6,500/- மற்றும் ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள், பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

மேலும் சென்னை ஊமை மற்றும் காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கான காசோலை, சென்னை ஐசிசிடள்யூ-டி.என். அனாதை இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவிற்கான காசோலை, சென்னை திருவான்மியூர் அனாதை இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவிற்கான காசோலை மற்றும் சென்னை அன்னை இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஏழை-எளிய ரசிகர்கள், பொதுமக்களுக்கு தையல்மிஷன், நல திட்ட உதவிகளை இயக்குநர்கள் தரணி, விஜய், விக்ரம் தந்தை, வினோத் ராஜ் ஆகியோர் வழங்கினார். நடிகர் விக்ரம் மேலாளர் கிரி, ரசிகர் மன்ற தலைவர் சூரிய நாராயணன் ஆகியோர் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: