முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய விமான இறக்கையில் 2 மணிநேரம் பயணித்த பாம்பு பலி

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

சிட்னி, ஜன. - 12 - ஆஸ்திரேலிய விமானமான குவான்டாஸின் இறக்கையில் 9 அடி மலைப்பாம்பு ஒன்று 2 மணிநேரமாக பயணம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்தில் இருக்கும் கெய்ர்ன்ஸ் என்ற பகுதியில் இருந்து குவான்டாஸ் பயணிகள் விமானம் நேற்று காலை பாப்புவா நியூ கினியா தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு கிளம்பியது. இந்த விமானத்தின் இறக்கையில் 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பயணம் செய்துள்ளது. விமானம் பறக்க ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்து தான் பெண் பயணி ஒருவர் மலைப்பாம்பு ஒன்று விமான இறக்கையில் இருப்பதைப் பார்த்தார். இந்த 2 மணி நேர பயணத்தின் போது அந்த பாம்பு கீழே விழுந்து விடாமல் இருக்க போராடியதுடன், குளிர்ந்த காற்றையும் சமாளித்தது. ஆனால் விமானம் போர்ட் மோர்ஸ்பியில் தரையிறங்கியபோது அந்த பாம்பு இறந்து கிடந்தது. இது போன்று சம்பவம் இதற்கு முன்பு தங்கள் விமானத்தில் நடந்ததே இல்லை என்று குவான்டாஸ் தெரிவித்துள்ளது. பாம்பு பயணத்தின்போது போராடி இறந்தது வருத்தமளிப்பதாக குவான்டாஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!