முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் வரலாறு காணாத பனிப்புயல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

இஸ்ரோல், ஜன, - 14 -  இஸ்ரேலில் 10 முதல் 15 செமீ உயரம் வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது. இரவு நேரங்களில் இன்னும் அதிகமாக இருப்பதால்? மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில இல்லாத வகையில் நேற்று கடும் பனிப்புயல் வீசியது. இதனால் 6 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரையில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளன. இதன் காரணமாக ஜெருசலேம் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியது. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மேலும் இஸ்ரேலின் வடகிழக்குப் பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதிகமான பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்?. சிலர் பனிப்பொழிவை அனுபவிக்கும் விதமாக விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்?. இருப்பினும்?, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும்?, அதிக நேரம் சாலைகளில் நேரம் கழிக்க வேண்டாம் என்றும்? அந்நாட்டு ராணுவம் வானொலி மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!