முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள்: இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஜன. 15 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி கொச்சியில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ் காட்டில் இரு அணிகள் மோதிய முதல் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும், கடை சி வரை போராடியது குறிப்பிடத்தக் கது. 

கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையி லான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிட ப்பட்டது. இதில் முதல் போட்டி முடி வடைந்தது.  

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடை யேயான 2- வது போட்டி கேரள மாநி லம் கொச்சி நகரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று பிற்பகல் துவங்க இருக்கிறது. 

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதி ராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் இழந் தது. 

எனவே ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று அணியின் கெளர வத்தைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. 

ராஜ்காட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கலக்கியது. இறுதி யில் அந்த அணி 326 ரன் எடுத்தது. 

இதில் கேப்டன் குக் மற்றும் இயான் பெல் இருவரும் நல்ல துவக்கத்தை அளி த்தனர். இதனால் பின்பு ஆடிய வீரர்கள் நன்குஆடியதால் அந்த அணி 300 ரன் னை எளிதாக தாண்டியது. 

பின்பு களம் இறங்கிய இந்திய அணி 317 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி பரபரப்பான ஆட்ட த்தில் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்றது. 

இந்திய அணி தரப்பில், காம்பீர், யுவ ராஜ்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா  ஆகி யோர் அரை சதம் அடித்தனர். பின்வரி சை வீரர்களும் கடைசி கட்டத்தில் சிறி து ஆடினர். 

இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தப் போட்டியி லும் அதே உற்சாகத்துடன் வெற்றி பெற முனைப்புடன் களம் இறங்குகிறது. 

எனவே இந்திய அணியின் பேட்ஸ்மே ன்களும், பெளலர்களும் ஒருங்கிணைந் து ஆடி அணிக்கு வெற்றி தேடித் தர வே ண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர மான விராட் கோக்லி சமீப காலமாக சொதப்பி வருகிறார். எனவே அவரும் இந்தப் போட்டியில் தனது திறனை நிரூபிக் க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

ராஜ்கா ட் போட்டியில் கடைசி ஓவரி ல் இஷாந்த் சர்மா மற்றும் புனவேனஸ்வர் குமார் இருவரும் 38 ரன்னைக் அள்ளிக் கொடுத்தனர். 

இந்திய அணியின் தோல்விக்கு இதுவு ம் ஒரு முக்கிய கராரணமாக கூறப்படு கிறது. எனவே இந்திய பெளலர்கள் சிக்கனமாக பந்து வீசி தங்களது நிலை யை காக்க வேண்டிய அவசியம் உரு

வாகி உ ள்ள து. 

இந்தப் போட்டியில் புஜாரா இடம் பெ

றுவாரா என்பது சந்தேகத்திற்கு இட மாக உள்ளது. அவர் சமீபத்தில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் முச்சதம் அடி த்தது நினைவு கூறத்தக்கது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது போட்டி கொச்சியில் பிற்பகல் துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்