முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிகேடியர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜன. 16 - எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதட்டம் நீடித்து வரும் நிலையில் இருநாட்டு குறிப்பிட்ட பகுதி பிரிகேடியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்ற போதும் தோல்வியில் முடிவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்படியான சூழலில் முதலில் சம்பவம் நிகழந்த இருநாட்டு குறிப்பிட்ட பகுதிகளின் பிரிகேடியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவது மரபு.  இந்தப் பேச்சு வார்த்தையை நடத்த இந்தியா கடந்த வாரமே அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் மவுனம் சாதித்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் இருநாட்டு ராணுவத்தின் 10 வது பிரிகேட் தளபதிகள் இடையே சுமார் 15 நிமிட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு ராணுவ தளபதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் உடனிருந்தனர். இந்திய ராணுவம் சார்பில் டி.எஸ். சாந்து கலந்து கொண்டார். இப்பேச்சுவார்த்தையின் போது 13 வது ரஜபுதனா ரைபிள்ஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த இரு ராணுவ வீரர்களை பாகிஸ்தானின் 29 வது பலூச் ரெஜிமெண்ட் பிரிவினரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும் பூஞ்ச் பகுதியில் சத்திரி போஸ்ட் அருகே கோரமாக படுகொலை செய்யப்பட்டதை மிக வன்மையாகக் கண்டித்தார். இத்தகைய கோரமான நடவடிக்கைகளுக்கு அதாவது இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்து எடுத்து சென்றதற்காகவும் இரு வீரர்களது ஆயுதங்களை பறித்துச் சென்றதற்காகவும் பகிரங்க மன்னிப்பு கோரும் வரை பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் எச்சரித்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாது என்ற உத்தரவாதத்தைப் பாகிஸ்தான் ராணுவம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இந்திய ராணுவ அதிகாரி லெப்டினட் ஜெனரல் ஓம் பிரகாஷ், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் தெரிவித்தார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பிடிவாதமாக இருந்ததாகவும் எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடித்துவிட்டு திரும்பிய பிரிகேடியர் சாந்து, பூஞ்ச்- ரஜோரி பகுதி கட்டளை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!