எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						
ஒசூர் பிப்.15 - ஓசூர் சூளகிரி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 6 பேர் பலியாயினர்.40 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லகான கொத்தம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சப்படி கிராம பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி ஆவின் பால்பண்ணைக்கு ஓசூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.லாரியை கிருஷ்ணகிரி ஆவின் நகரைச் சேர்ந்த ராஜூ(56) என்பவர் ஓட்டிச் சென்றார். அதே வேளையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. சப்படி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சுமார் 1 கி மீ தூரத்திற்கு ஒரே சாலையில் வாகனங்கள் செல்லும் சூழ்நிலை உள்ளது.
சப்படி கிராம பகுதியில் லாரியும்-பஸ்சும் வந்த போது ஒரு வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் ஆவின் லாரி டிரைவர் டிரைவர் ராஜூ(56) ஆந்திரா குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(40), பர்கூரைச் சேர்ந்த சேகர்(50), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தகாசிநாதன்(53)) தேன்கனிக்கோட்டை தேவகானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி(53), ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன்(40),
பெரியாம்பட்டி வெங்கடேஷ்(40),கிருஷ்ணகிரி செக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜா(60),கோ வையை சேர்ந்த பாலசுப்பிரமணி(45), திருப்பத்தூர் மணிகண்டன்(20) ஓசூர் மருதையன்(57), கிருஷ்ணகிரி ஓல்ட் பேட்டையைச் சேர்ந்த பசில்(40), காட்பாடி,ஏழுமலை(49), பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த சபி(41), கிருஷ்ணகிரி,விமலா(37), கோவிந்தப்பள்ளி,குப்பம்மாள்(37), திருப்பத்தூர் பெரியசாமி(50), கிருஷ்ணகிரி,செல்வம்(25) ஒரிசா,ஜிஜேந்திரா(24) தேன்கனிக்கோட்டை,தியாகராஜன்(40) தேவகானப்பள்ளி, தேவீரம்மா(60) உள்பட 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். உடனே அப்பகுதி கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இது குறித்து சூளகிரி போலீசாருக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரவின் பி.நாயர் மற்றும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆவின் லாரி டிரைவர் ராஜூ மற்றும் தேவனானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி ஆகியோர் இறந்து போயினர். இதில் 25 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் 19 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், பர்கூரைச் சேர்ந்த சேகர், திருப்பத்தூரைச் சேர்ந்த காசிநதான், ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர்.
விபத்து நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சில மணி நேரம் போக்குரவத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தவர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 
-   
          சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
-   
          கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. 
-   
          இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.31 Oct 2025
-   
          ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
-   
          ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
-   
          பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர 
-   
          பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார். 
-   
          கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு. 
-   
          இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
-   
          ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது. 
-   
          சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 
-   
          த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
-   
          ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
-   
          அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 
-   
          மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது: தி.மு.க. மீது தமிழிசை குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : தி.மு.க., மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 
-   
          தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். 
-   
          முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
-   
          இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். 
-   
          வெறுப்புவாத அரசியல் செய்கிறது: பா.ஜ.க. மீது கனிமொழி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : வெறுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க.வின் வாடிக்கை என்று கனிமொழி எம்.பி. கூறினார். 
-   
          வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
-   
          டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்31 Oct 2025மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். 
-   
          சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை31 Oct 2025காந்தி நகர் : சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை 
-   
          கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய கோர்ட்டு உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கை31 Oct 2025புதுடெல்லி, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

























































