முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் டெல்லி கணேசுக்கு மாரடைப்பு - சிகிச்சை

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 1 - நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த அட்டகாசமான நடிகர். ஆரம்பத்தில் நாயகனாக நடித்து வந்த இவர் பின்னர் குணச்சித்திரம், வில்லத்தனம், காமெடி என கலவையாக மாறி அமர்க்களம் செய்தவர். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக பரிமளிக்கும் அபாரமான நடிகர். இவர் குடும்பத்துடன் ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார். 62 வயதான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!