முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கார்த்தி திருமணம் - ஜூலை 3-ந்தேதி நடக்கிறது

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - நடிகர் கார்த்தி திருமணம் வருகிற ஜூலை மாதம் சென்னையில் நடக்கிறது. பருத்தி வீரன், படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம ஆனவர் நடிகர் கார்த்தி. பிரபல நடிகர் சிவகுமார், லஷ்மிசிவகுமார் தம்பதியினரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

இவர் சில மாதங்களாக பிரபல நடிகையுடன் இணைந்து கிசுகிசுக்கள் வெளி வந்தன. இந்நிலையில் நடிகர் கார்த்தி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் இளைய மகன் கார்த்திக்கும், ஈரோடு மாவட்டம் சின்னசாமி, ஜோதி மீனாஷி தம்பதியினர் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டுள்ளது. 

நடிகர் கார்த்தி சென்னையிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் பி.ஏ முடித்து  அமெரிக்காவிலுள்ள நியூகார்க்கில் பிங்காம்டன் பல்கலைக்கழக்ததில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் படித்துள்ளார். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களின் வெற்றி நாயகன்.

மணபெண் ரஞ்சனி சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். இவர்களது திருமணம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த திருமண விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago