சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரிட்சை

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மே. 8 - ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தி ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோ த உள்ளன. ஐதராபாத் அணி உள்ளூர் போட்டிகளி ல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிற து. எனவே சென்னை அணியின் சவா லை சமாளிக்குமா என்ற கேல்வி எழுந்துள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி 7 ஆட்டத்தில் தொடர்ந் து வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலி ல் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. 

ஐதராபாத் அணி இதுவரை மொத்தம் 11 ஆட்டத்தில் பங்கேற்று 14 புள்ளிகள் பெற்று உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு அதிகரிக் கும். 

கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோ ல்வி அடைந்த போதிலும், சென்னை அணி அதிக வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. 

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 80 ரன்னை எடுத்து பரி தாபமாக தோல்வி அடைந்தது. இது இந்த சீசனில் குறைந்த பட்ச ஸ்கோரா கும். 

இருந்த போதிலும், சென்னை அணி வீரர்கள் தற்போது நல்ல பார்மில் இரு ப்பதால் இன்றைய போட்டியில் சிறப் பாக ஆடி தங்களது திறனை நிரூபிப் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த போட்டியில் பெற்ற தோல்வியி ல் இருந்து பாடம் கற்று தவறுகளை சென்னை அணி திருத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை அணிக்கு எதிரானதோல்வி குறித்து கேப்டன் தோனியிடம் கேட்ட போது, ரவுண்டு ராபின் நிலையிலே யே இந்தத் தோல்வி கிடைத்ததும் ஒரு புறம் மகிழ்ச்சிதான் என்றும் இந்தத் தோல்வி தனது அணிக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி என்றும் அவர் கூறி னார்.

சென்னை கிங்ஸ் அணியில் மைக் ஹஸ் சே, சுரேஷ் ரெய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இதனால் செஏன்னை அணி எந்த அணியின் சவாலையும் சந்திக்க ஆயத் தமாக உள்ளது. 

பந்து வீச்சைப் பொறுத்தவரை , அல்பி மார்கெல், கிறிஸ் மோரிஸ், டிவைன் பிராவோ, அஸ்வின் மற்றும் மொகித் சர்மா ஆகியோர் நன்றாக பந்து வீசி வருகின்றனர். 

ஐதராபாத் அணி குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று வருகிறது. அந்த அணியின் வீர ர்கள் ஒருங்கிணைந்து ஆடி வருகின்றனர். 

இதனால் ஐதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணிக ளுக்கு எதிராக திரில் வெற்றியைப் பெற்றது நினைவு கூறத்தக்கது. 

ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பல மாக உள்ளது. உலக நம்பர் -1 பந்து வீச் சாளரான டேல் ஸ்டெயின், இஷாந்த் சர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய  போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி அர ங்கத்தில் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: