குன்றத்து கோயிலில் பஞ்சாப் கவர்னர் பாட்டீல்

Tpk Kumar 0

 

திருப்பரங்குன்றம்,மே.3 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் நேற்று மாலை 5.10 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.  

அங்கு அவருக்கு சிவாச்சாரியார்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் அறங்காவல் குழு தலைவர் விஜயராகவன், துணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் முடித்த சிவராஜ் பாட்டீல் திருமோகூர் காளமேக பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்புவனத்தில் மடப்புரம் காளிகோயிலிலும் பாட்டீல் சுவாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ