முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன்.23 - மராட்டிய மாநிலத்தில் தகிசார் பகுதியில்  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். தகிசார் கிழக்குப் பகுதியில் மார்க்கெட் பகுதியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தை அபாயம் கருதி வெற்றிடமாக வைத்திருந்தனர். 

ஆனால் இரவு நேரத்தில் காய்கறி விற்பவர்கள் இந்த இடத்தில் தங்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் இதை அதன் உரிமமையாளர் மராமத்து செய்யவில்லை. இந்த இடத்துக்குள் செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கட்டிடம் இடிந்து  விழுந்ததில் இதில் தங்கிய 5 பேர் உயிரிழந்தனர்.

இடிந்து விழுந்த இந்த  கட்டிடத்தை நிருபம் எம்.பி. பார்வையிட்டார்.           

இதில் காயமடைந்த 6 பேரும், சிகிச்சைக்காக பகவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். தானே பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 குழந்தைதள் உள்பட 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் மேலும்தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago