முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்க பயிற்சி முகாம்: பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

தேனி, ஜூன். 30  - தேனி மாவட்டம், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாக குழுத்தலைவர்களுக்கு கூட்டுறவு சங்ககங்களை நிர்வாகிப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாமை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 

தமிழக முதல்வர் மக்களுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்தி வருகிறார்கள். கூட்டுறவே நாட்டு உயர்வு என்ற அடிப்படையில் சமூக பொருளாதாரத்தை சமநிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கூட்டுறவு சங்கங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ்ஈடுபட்டு வருகின்ற விவசாய பெருங்குடி மக்கள் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்காக கூட்டுறவுத்துறையின் மூலம் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 

தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாய பெருங்குடி மக்களுக்காக மானிய விலையில் விதைகள், உரங்கள், வேளாண் ்இடுபொருட்களையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேளாண் தொழில் தங்குதடையின்றி நடைபெறுவதற்காக மானிய விலையில் வேளாண் கருவிகள், வாடகை வாகனங்கள் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்தன் காரணமாக ஏற்பட்ட வறட்சியை போக்குகின்ற வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மாவட்டமும் (சென்னை தவிர) வறட்சி மாவட்டமாக என்று அறிவிக்கப்பட்டு வறட்சி நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்கப்பட்டுள்ளது. 

நமது விவசாய முறை கூட்டுறவு சங்கங்களை சார்ந்துள்ளதால், வேளாண் தொடர்பான அனைத்து திட்டங்களும் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பணியாற்றும் போது தங்களது பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் சமமான பொருளாதார மேம்பாடு அடைவதற்கு அரசு அளிக்கின்ற நிதியினை சமநிலையில் கொண்டு செல்லும் வகையில் தங்களுடைய பணி திகழ வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் வருகின்ற கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு முன் உதரணமாக தங்களது பணி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

பயிற்சியில் கூட்டுறவு சங்கங்கத்தை நிர்வகிப்பது தொடர்பான செயல் விளக்க பயிற்சி கைதேர்ந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டது. முன்னதாக கூட்டுறவு உறுதி மொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெள்ளியங்கிரி வரவேற்றார். மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், கம்பம் நகர்மன்றத்தலைவர்  சிவக்குமார், தேனி நகர்மன்றத்தலைவர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் செல்லமுத்து, முருக்கோடை ராமர், தேனி மாவட்ட கோ கோ விளையாட்டு கழகத்தலைவர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், தேனி மாவட்ட வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் எல்லப்பட்டி முருகன், கூட்றவு சங்கங்கள் துணைப்பதிவாளர்கள் முருகேசன், அமிர்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்