முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. பங்கு: தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.2 - என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தாமே வாங்கி கொள்ள தமிழக  அரசு விருப்பம் தெரிவித்து இருந்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும்  என்று மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்திருக்கிறார். இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

   என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.அந்த கடிதத்தில் என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று ஒரு புதிய யோசனையை முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த கடிதத்திற்கு உடனே பதில் வராத காரணத்தால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 2ம் தேதி( இன்று) அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றின் மூலம் கூறியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டம்  இன்று நடக்கவிருந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

   இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது, அவர் என்எல்சி பங்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விருப்பத்தை பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். முதல்வர் எழுதிய கடிதத்தை நான் பார்க்கவில்லை. அது பிரதமருக்கு எழுதப்பட்டு அனுப்பட்டுள்ளது. 

அந்த நகலும் எனக்கு வந்து சேரவில்லை. இருப்பினும், என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க விரும்பும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார்.  இது பற்றி மேலும் கூறிய அவர் என்எல்சி நிறுவன  நிர்வாகத்திலோ அல்லது பணியாளர் கொள்கையிலோ எந்த மாற்றமும் இருக்காது என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் பங்கு விற்பனை தொடர்பாக செபி அமைப்புடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்குமாறு மூலசந்தைகள்கேட்டுக்கொள்ளப்படும். 

    ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் பங்குகளை விற்கிறோம். அதாவது, செபி அமைப்பின் நடைமுறைகளுக்கு ஏற்பவே பங்குகளை விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். ஆனால் செபியுடன் ஆலோசிக்க நான் வேண்டும். எனவே ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டாம். எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசு ஒரு யோசனை கூறியுள்ளது. நாங்களும் அதை நிராகரிக்கவில்லை. நிச்சயம் பரிசீலிப்போம். அது நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம். எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என்று என்எல்சி தொழிலாளர்களை நிதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். என்எல்சி தொழிலாளர்கள் நாளை நள்ளிரவு முதல் காலவறையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக அரசின்கோரிக்கையை பரிசீலிக்க தயார் என்று கூறியிருப்பதன் மூலம் முதல்வரின் முயற்சிக்கு மற்றொரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்