முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளருக்கு ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      தமிழகம்
Supreme-Court 2024-11-269

புதுடெல்லி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது. இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மருத்துவ சிகிச்சையை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து