முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றப் புகார்களை விசாரிக்க ஐ.ஜி தலைமையில் குழு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - நாடு முழுவதும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபற்றிய ஏராளமான புகார்களும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 1997-ம் ஆண்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அனைத்து மாநிலங்களிலும் இதுதொடர்பாக தனி கமிட்டியை அமைக்க வேண்டும் என்று உத்தரவித்தது.

இதன்படி தமிழகத்தில் ஐ.ஜி. சீமா அகர்வால் தலைமையில் தமிழகத்தில் தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு பெண் போலீஸ் ஐ.ஜியான லலிதா லட்சுமி, ஐ.ஜிக்கள் வெங்கட்ராமன், நல்லசிவம் ஆகியோரும், பெண் வக்கீல் வல்சலாகுமாரியும் இடம் பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை இவர்கள் இனி விசாரிப்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்