முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க மறுப்பு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கேட்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆனால், என்.எல்.சி.க்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த தடையையும் மீறி தொழிற்சங்கங்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு, மின்உற்பத்தியும் குறைந்துள்ளது.

இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொழிற்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலை நிறுத்த போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர். மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்