முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா இறுதிச் சுற்றுக்கு தகுதி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

இபோக், செப். 1 - ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் இந் தியா மலேசியாவை வென்றது. மலேசியாவின் இபோக் நகரில் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. 

நேற்று நடந்த அரை இறுதியில் இந் தி யாவும் மலேசியாவும் மோதின. ஆட்டத்தின் 8 -வது நிமிடத்தில் இந்தியாவி ன் ரகுனாத் பெனால்டி கார்னர் வாய்ப் பை பயன்படுத்தி கோல் போட்டார். 

இதனால் இந்திய அணி 1-0 என்ற கண க்கில் முன்னிலை பெற்றது. மலேசிய வீரர்கள் எவ்வளவோ முயன்றும் முதல் பாதியில் கோல் எதுவும் போட முடிய வில்லை. 

2-வது பாதியின் 60 - வது நிமிடத்தில் இந்தியா 2-வது கோலை அடித்தது. இத ைன இந்திய வீரர் மந்திப் சிங் அடித்தார். 

கடைசி வரை போராடியும் மலேசிய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் அபார வெ ற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இந்த வெற்றியால் அடுத்த ஆண்டு ஹாலந்தில் நடைபெறும் உலகக் கோ ப்பை ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெ றும் வாய்ப்பை இந்தியா நெருங்கி உள்ளது. 

மற்றொரு அரை இறுதியில் தென் கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆடிய ஆட்டத்தில் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டி க்கு தகுதி பெற்றுள்ளது. 

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி யில் இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் கோப்பைக்காக களம் இறங் குகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்