முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிவாசல் இடத்தை அபகரிக்க முயன்ற 7 பேர் மீது வழக்கு

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - மயிலாப்பூரில் உள்ள ஒரு மசூதிக்கு சொந்தமான இடத்தை தி.மு.க.வை சேர்ந்த 2 வட்ட செயலாளர் 1 வட்ட நிர்வாகி உள்பட பலர் அபகரிக்க முனைவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகி அளித்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மயிலாப்பூர் மசூதி தெருவில் ஆகாமொய்தீன் பள்ளிவாசல் உள்ளது. அதன் நிர்வாகியாக ஜரூக்அலி (42) என்பவர் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் மயிலாப்பூர் எஸ்.ஐ. கார்த்திக்கிடம் புகார் ஒன்றை அளித்தார். தங்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் 9 1/2 கிரவுண்டு நிலத்தை தி.மு.க.வை சேர்ந்த 147-வது வட்டச்செயலாளர் மணி (எ) பட்டாணி மணி 146-வது வட்டச்செயலாளர் அன்புகபாலி 143-வது வட்ட தி.மு.க. நிர்வாகி மதுரை முத்து உள்ளிட்ட சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும், இது பற்றி புகார் அளித்ததற்காக நேற்று முன்தினம் மாலை தொழுகை நடந்து முடிந்த பிறகு மேற்கண்ட 3 பேரும் சுமார் 50 பேருடன் வந்து தன்னை மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மீண்டும் புகார் அளிக்க வந்ததாகவும் கூறினார்.

இதையொட்டி மயிலாப்பூர் போலீசார் மேற்கண்ட 3 பேர் உட்பட 7 பேர் மீது 147, 148, 427, 448, 204/பி 502 (2) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony