முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித்தேர்வர்கள் செய்முறை வகுப்புக்கு பதிவு செய்ய வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை  செப் 30 - பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை வகுப்புகளுக்குப் பதிவு செய்ய நேரடித் தனித்தேர்வர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2013_14 ஆம் கல்வியாண்டில் நேரடியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஜூன் 3 முதல் 30_ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிக்குள் பதிவு செய்துகொள்ள தவறிய நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தனித்தேர்வர்கள், பதிவு செய்து பயிற்சி பெறாதவர்கள் ஆகியோர் தங்களது பெயர்களை அக்டோபர் 1 முதல் 15 வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்காக பதிவு செய்யலாம்.

இந்த மாணவர்கள்  சூசூசூ.சிடூக்ஷகிடீ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான ரூ.125 கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை (டி.டி.) எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வரைவோலையை மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலகங்களை அணுகலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago