Idhayam Matrimony

மகாத்மா பாபா பள்ளியில் ஓவிய கண்காட்சி நடந்தது

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.23 - மதுரை மகாத்மா பாபா மேல்நிலைப்பள்ளியும், கே.கே. நகர் பள்ளியிலும் ஓவியக்கண்காட்சி கோலாகலமாக இனிதே நடைபெற்றது. பள்ளி முதல்வர் பிரேமலதா பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஜாக்லின் வாடன், சாந்தி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அட்வகேட் மதுமிதா பக்ஷி கலந்து கொண்டு ஓவியக்கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மகாத்மா பாபா மாண்டிச்சோரி மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளரும், ஓவிய ஆசிரியருமான கலைச்சுடர்மணி ஜெ.நோபிள், பூவேந்திரன், தங்கராஜபாண்டியன், சீனிவாசபிரபு, டெய்ஸி, வைஜெயந்திமாலா, ராகவி சினி ஆர்ட்ஸ் இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான ஜெ.விக்டர், மாணவ மாணவியர் ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கிராமத்தின் தோற்றம் எங்கள் உயரின் உருக்கம் என்ற தலைப்பில் வரையப்பட்ட ரங்கோலி மிகவும் அற்புதமாக இருந்தது. நீரின்றி அமையாது உலகு -என்பதற்கேற்ற இக்கண்காட்சி நீரின் அவசியத்தையும் உணர்த்துகின்றது. கைவினைப்பொருட்கள் கண்காட்சி, சமையல்கலை கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மாணவ, மாணவியரின் பலவகையான ஓவியங்கள் இக்கண்காட்சியில் வைத்திருந்தனர். எண்ணற்ற இரவி வர்மாக்கள் இப்பள்ளியிலிருந்து உருவாகுவர்கள் என்ற நம்பிக்கையை இந்த ஓவியக்கண்காட்சி உணர்த்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago